search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற உறுப்பினர்"

    • ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
    • முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

    பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

    • சமுதாயக்கூடம் கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி முனிசிபல் பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 நிதியின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்தை, நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷாநவாஸ் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பா.திலகர், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நா.அருட்செல்வன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
    • மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.

    மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.

    "மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    ×